அமெரிக்கா – ரஷ்ய உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சம் – மகிழ்ச்சியில் புட்டின்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளில் புதிய ஒளி தென்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
சரோவ் நகரில் அமைந்துள்ள அணு ஆயுத ஆய்வு மற்றும் உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலைமைத்துவ குணங்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்” என நம்புவதாகக் கூறினார்.
அலாஸ்காவில் நடந்த இருதரப்பு சந்திப்பு குறித்து அவர், “மிகவும் வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல் நடைபெற்றது” என்றார். இந்த சந்திப்பு, எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான நல்ல தொடக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து அமெரிக்காவுடன் ஆர்க்டிக் மற்றும் அலாஸ்கா பகுதிகளில் இயற்கை எரிவாயு தொடர்பான கூட்டு முயற்சிகள், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து உயர் மட்ட அரசுத் தலைவர்கள் வட்டத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று புடின் கூறினார்.
“இரு நாடுகளிடமும் உலகின் சிறந்த தொழில்நுட்ப வளங்கள் உள்ளன. நாம் இணைந்து செயல்பட்டால், இரு மக்களுக்கும் நன்மை பயக்கும் வளர்ச்சியைக் காண முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.