தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாட்டில் கார் மீது விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம்

நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டின் ஏற்பாடுகளின் போது 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், குறித்த கம்பம் ஒரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதேவேளை, காரிற்குள் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று (21) இடம்பெறவுள்ள நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)