மகாராஷ்டிராவில் லாரி மோதி தாய் மற்றும் கர்ப்பிணி மகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் நாசிக் சாலைப் பகுதியில் சாலையைக் கடக்கும்போது வேகமாக வந்த லாரி மோதியதில் 50 வயது பெண் ஒருவரும் அவரது 27 வயது கர்ப்பிணி மகளும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புகழ்பெற்ற முக்திதாம் கோயில் அருகே சுனிதா வாக்மாரே மற்றும் அவரது மகள் ஷீத்தல் கேதாரே ஆகியோர் மீது லாரி மோதிய பின்னர், அந்த லாரி ஒரு கார் மற்றும் இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்களில் மோதியது.
வாக்மாரே உடனடியாக இறந்தார், பின்னர் கேதாரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். கேதாரே பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.
(Visited 2 times, 1 visits today)