புட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை – ட்ரம்ப்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் சந்திப்பு நிகழும் என்பதை கிரெம்ளின் குறைத்து மதிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க இரு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் டிரம்ப் மீண்டும் புதிப்பித்துள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் ஏழு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுக்கூடி பேச்சுவார்த்தை நடத்திய பிறக இரு நாட்டு தலைவர்ளின் சந்திப்பு குறித்த வலியுறுத்தல் மேலோங்கியுள்ளது.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது சாத்தியம் என்பதையும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு போர் நிறுத்தத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.