உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் தயார் – அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்ததாக வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மூன்று வருட போருக்குப் பிறகு புடின் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கத் தயாராக இருப்பது ஒரு “பெரிய விஷயம்” என்று ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை செயலாளர் மேலும், புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை நோக்கி அவர்கள் பணியாற்றி வருவதாகவும், அது சரியாக நடந்தால், டிரம்புடன் ஒரு முத்தரப்பு சந்திப்பும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஒரு தரப்பு 100 சதவீதம் பெறும் என்று எதிர்பார்ப்பது நம்பத்தகாதது என்றும், இரு தரப்பினரும் சமரசம் செய்ய வேண்டும் என்றும் ரூபியோ வலியுறுத்தினார்.
(Visited 1 times, 1 visits today)