அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – இருவர் பலி – மூவர் படுகாயம்

அமெரிக்காவின், தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தனது வீட்டிற்குள் இறந்து கிடந்ததை அந்நாட்டு பொலிஸார் கண்டறிந்தனர்.
அதே நேரத்தில், மற்றொரு நபர் அருகிலுள்ள சிற்றூர்ந்து நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)