சீனாவுக்கு இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பதிலடி – டிரம்ப் உறுதி

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இப்போதைக்கு சீனாவுக்கு பதிலடி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படுவது உறுதி என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து மிக அதிக அளவில் எண்ணெய் வாங்குகின்றன. அண்மையில் அதனைக் காரணங்காட்டி இந்தியாவுக்குக் கூடுதலாக 25 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார்.
ஆனால் சீனா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி அவர் உறுதியாக எதுவும் சொல்ல தயங்குகிறார்.
கடுமையான வரி விதிக்கப்பட்டால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்நிலையில் சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசி வருகின்றன.
(Visited 5 times, 5 visits today)