வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக வருகைத்தர இருந்த அமெரிக்கர்க பிரதிநிதிகளின் பயணம் இரத்து!

ஆகஸ்ட் 25-29 திகதிகளில் அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் புது தில்லிக்கு மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவதோடு, ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்கள் மீதான கூடுதல் அமெரிக்க வரிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.
முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய சுற்று பேச்சுவார்த்தைகள் இப்போது முடிவு செய்யப்படாத மற்றொரு திகதிக்கு ஒத்திவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) கையாளும் வர்த்தகம் மற்றும் கட்டண பேச்சுவார்த்தைகள் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை என்று புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.