இலங்கை – கந்தளாய் பொலிஸாருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில்சிறப்பு சந்திப்பு!

சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுப் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஒன்பது காவல் பிரிவுகளில் உள்ளடங்கியுள்ள பொலிஸாருக்கும், ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கந்தளாய் “பொலிபோ” காவல் விடுதியில் ஒரு சுமூகமான சந்திப்பு நடைபெற்றது.
கந்தளாய் பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் எல்.எம். சஞ்சீவ பண்டார கலந்து கொண்ட இந்த சுமூகமான சந்திப்பில், சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுப் பாதுகாப்புக்காக பத்திரிகையாளர்களின் ஆதரவைப் பெறுதல், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பாதுகாத்தல் மற்றும் பகுதியில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகருக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தை திருகோணமலை மாவட்டம் கங்கத்தலாவை ஐக்கிய ஊடக மன்றம் ஏற்பாடு செய்தது.
இறுதியாக, திருகோணமலை மற்றும் கந்தளாய் காவல் பிரிவுகளில் உள்ள 20 காவல் நிலையங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, திருகோணமலை கங்கத்தலாவ ஐக்கிய ஊடக மன்றத்தால் தொகுக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ தொலைபேசி இலக்கங்கள் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி இலக்கங்கள் கொண்ட புத்தக பிரதிகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் எல்.எம். சஞ்சீவ பண்டார, பத்திரிகையாளர்களிடம் வழங்கியிருந்த மையும் குறிப்பிடத்தக்கது.