உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யாவின் ரயில் நிலைய ஊழியர் காயம் ; ஆளுநர்

உக்ரேனின் ஆளில்லா வானூர்தி தாக்கியதில் ரஷ்ய ரயில்வே ஊழியர் ஒருவர் காயமடைந்தார்
வோரோனேச் பகுதியில் உள்ள ஒரு நிலையத்தில் உக்ரேன் வானூர்திளை ஏவித் தாக்கியதில் ரயில்வே ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும், மின்கம்பி சேதமடைந்ததாகவும் அவ்வட்டார ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
“முதற்கட்ட விசாரணையில் நகராட்சி ஒன்றில் ரயில் நிலைய தண்டவாள தொழில்நுட்பர் ஒருவர் காயமடைந்ததார் என்பது தெரிய வந்துள்ளது,” என்று டெலிகிராம் செய்தி செயலியில் இரவு நேர தாக்குதல் குறித்து அவர் கூறினார்.காயம் அடைந்த ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.உக்ரேனின் தாக்குதலால் ரயில் சேவை தாமதமானது, ஆனால் ஞாயிற்றுக் கிழமை காலை ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது என்றார் அவர்.
உக்ரேன் எத்தனை வானூர்திகளை ஏவியது என்பதைவிட அவற்றின் எத்தனை வானூர்திகள் அழிக்கப்பட்டது என்பதை மட்டும் தெரிவிக்கும் ரஷ்ய தற்காப்பு அமைச்சு, ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள வொரோனேச் வட்டாரத்தில் உக்ரேன் பாய்ச்சிய ஒன்பது வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டது.
இரவு முழுவதும் மொத்தம் 46 உக்ரேனிய வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அது மேலும் கூறியது.ஆனால் ரஷ்யாவின் தகவலை ராய்ட்டர்சால் உறுதிப்படுத்த முடியவில்லை. இது குறித்து உக்ரேனும் கருத்து தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவிற்குள் தனது தாக்குதல் உக்ரேன் மீதான தொடர்ச்சியான தாக்குதலுக்கு பதிலடி என்றும் ரஷ்யாவின் போர் முயற்சிகளைத் தடுக்க அதன் உள்கட்டமைப்புகளை அழிப்பது நோக்கம் என்றும் உக்ரேன் கூறியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிம் புட்டினும் நடத்திய பேச்சுவார்த்தை எந்தவிட முடிவும் எட்டப்படாமல் முடிந்துள்ள நிலையில் உக்ரேன் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.போரை முடிவுக்குக் கொண்டு ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று சனிக்கிழமையன்னு உக்ரேனுக்கு அதிபர் டிரம்ப் அறிவுரை வழக்ஷ்கியிருந்தார்.ரஷ்யா ஒரு பெரிய நாடு, உக்ரேன் அப்படியல்ல என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.