பாகிஸ்தானுக்கு 3வது நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீன இராணுவம்

பாகிஸ்தானுக்கு 3வது நீர்மூழ்கி கப்பலை சீனா இராணுவம் வழங்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது தாக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, சீனா பாகிஸ்தானுக்கு 3வது ஹேங்கர் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது.
மொத்தம் 8 ஹேங்கர் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் திட்டத்தில், இது மூன்றாவது கப்பல் ஆகும்.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணம், வுஹானில் கடந்த வியாழக்கிழமை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது என சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வரிசையில், கடந்த மார்ச் மாதம் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானின் க்வாடார் துறைமுகத்தில் சீன கடற்படை செயல்படும் நிலையையும் கட்டி வருகிறது.
பாகிஸ்தானின் ராணுவத்துக்கு ஆதரவாக சீனா கடந்த சில ஆண்டுகளில் 4 அதி நவீன போர் கப்பல்கள், ரிஸ்வான் உளவு கப்பல், ஜேஎப்-17 போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட பல இராணுவ உபகரணங்களையும் வழங்கியுள்ளது.