யாழ்ப்பாணத்தில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் – ஆறு கால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை யாழ்ப்பாணம் – சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞரின் உடலம் தற்சமயம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)