10 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – கனடாவில் முடங்கிய விமான இயக்கம்

கனடாவில் 10,000க்கும் அதிமான விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான செயற்பாடு முடங்கியுள்ளது.
கனடாவின் மிக பெரிய விமான நிறுவனமான எயார் கனடா 64 நாடுகளுக்கு தினமும் 700க்கும் மேல் விமானங்களை இயக்கி வருகிறது.
ஊதியம் தொடர்பாக ஏர் கனடா விமானப்பணியாளர்களுக்கும் ஏர் கனடா நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக புதன்கிழமை இரவே விமான பணியாளர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் இருந்து வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
இதில்,10,000க்கும் அதிமான விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான சேவையை நிறுத்துவதாக எயார் கனடா நேற்று அறிவித்தது.
எயார் கனடாவின் இந்த அறிவிப்பால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும், மற்ற பயணிகள் விமான சேவையை உறுதி செய்த பிறகு விமான நிலையத்திற்கு வரவும் எயார் கனடா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.