திருகோணமலையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாடில் இராணுவ வீரர் ஒருவர் கைது

திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்யாணபுர பகுதியில் கஞ்சா போதை பொருளை தம்மசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல-கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த தினபாலகே விஜேதிலக (48வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த இராணுவ வீரர் வீட்டுக்கு வந்தபோது வீட்டை சோதனையிட்ட வேளை அவரிடமிருந்து 10g கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)