டிரம்ப்-புடின் சந்திப்புக்கு முன்பு உக்ரைனில் திடீர் முன்னேற்றம் காண ரஷ்யா முயற்சி

ரஷ்யப் படைகள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) உக்ரேனின் கிழக்குப் பகுதியில் திடீரென்று முன்னேறின. டோப்ரோபில்லியா எனும் நகரத்துக்கு அருகில் ரஷ்யப் படைகள் செல்வதை உக்ரேனின் அதிகாரபூர்வ டீப்ஸ்டேட் இணைய வரைபடம் காட்டுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் அலஸ்காவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) சந்திக்கவிருக்கும் வேளையில் அண்மைத் தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரேனின் டொனெட்ஸ்க் வட்டாரத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் 10 கிலோமீட்டர் முன்னேறியதை வரைபடம் காட்டுகிறது.
நிலைமை மிகவும் குழப்பமாய் இருப்பதாகவும் ரஷ்யப் படைகள் வேகமாய் முன்னேறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோ அது பற்றி உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
(Visited 3 times, 3 visits today)