பிரித்தானியாவில் 5 பகுதிகளில் கடும் வெப்ப எச்சரிக்கை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் உள்ள 5 பகுதிகளில் கடும் வெப்பம் தொடரக்கூடும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.
முன்னதாக இருந்த மஞ்சள் விழிப்பு நிலை, தற்பொழுது செம்மஞ்சள் எச்சரிக்கை விழிப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வெப்பத்தால் பயணத் திட்டங்களில் தாமதம் மற்றும் இடையூறுகள் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகளின் தேவையும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறைந்தது மூன்று நாட்கள் வரை 34 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 8 times, 8 visits today)