வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இலங்கையர்கள் – அதிகரிக்கும் பதிவுகள்

இலங்கையில் வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில் வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ளன.
ஜூலை மாதத்தில் வாகனப் பதிவுகள் 35,232 ஆக அதிகரித்துள்ளன. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 22,340 ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள் பதிவுகள் இரட்டிப்பாகியுள்ளன.
அதன் எண்ணிக்கை 26,171 ஆகும். மேலும் மக்கள் கொள்வனவு செய்யும் வாகனங்களில் பெரும்பாலானவை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களாகும்.
2,748 கார்கள் மற்றும் 3,299 எஸ்யூவிகள் உள்ளன. 3,800 மின்சார மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் யாடியா பிராண்ட் முன்னணியில் உள்ளது.
இருப்பினும், முச்சக்கர வண்டிப் பதிவுகள் குறைவாகவே உள்ளன, ஜூலை மாதத்தில் 454 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பை தளமாகக் கொண்ட தரகு நிறுவனமான ஜேபி செக்யூரிட்டீஸ் நடத்திய பகுப்பாய்வின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.