கனடாவில் 21 வயது இந்திய மாணவி கொலை வழக்கில் 32 வயது நபர் கைது

ஒன்ராறியோவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் 32 வயது ஜெர்டைன் ஃபாஸ்டர் என்ற நபரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
21 வயது இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவாவை சுட்டுக் கொன்ற வழக்கில், அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்காலிக காவல்துறை துணைத் துப்பறியும் அதிகாரி டேரில் ரீட் செய்தியாளர் சந்திப்பில், ஃபாஸ்டர் மீது மேலும் மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து தனது படிப்புக்காக பயணம் செய்த ஹர்சிம்ரத் ரந்தாவா, ஏப்ரல் 17 மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பர் ஜேம்ஸ் தெரு மற்றும் சவுத் பெண்ட் சாலை சந்திப்பில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே நடந்தது.
சம்பவம் நடந்தபோது ரந்தாவா தனது உடற்பயிற்சி கூடத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது நடைப்பெற்றது.