மூளையின் சிந்தனை திறனை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு தளங்களை அதிகமாக பயன்படுத்துவது மனித மூளையின் சிந்தனை திறனை பெரிதும் பாதிக்கக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
MIT பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ChatGPT போன்ற AI கருவிகளை தொடர்ந்து பயன்படுத்தும் பயனர்களின் சிந்தனை திறன் சுமார் 47% வரை குறைந்துவிட்டதாக MIT விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, குறுகிய நேரத்திற்கு முன்பு எழுதிய தகவல்களையே நினைவில் வைத்திருக்க இயலாத நிலை இந்த பயனர்களில் காணப்படுவதாகவும், இது அவர்களது மூளையின் செயல்பாடுகளில் தீர்வுகள் எடுக்கும் திறனைத் தெளிவாக பாதிக்கக்கூடியதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாறாக, AI கருவிகளைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் எழுதும் மற்றும் சிந்திக்கும் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் பெரும்பாலும் ஏற்படவில்லை என்றும் ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆய்வு முடிவுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அளவு மற்றும் அதனால் ஏற்படும் எதிர்வினைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகின்றன. AI கருவிகளை தவிர்க்க முடியாத உலகில், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும், மனித மூளையின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.