நேட்டோ திட்டத்திற்காக $644 மில்லியன் வழங்கும் ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நோர்வே

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக, பேட்ரியாட் ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான நேட்டோ தலைமையிலான முயற்சிக்கு ஸ்வீடன், நோர்வே மற்றும் டென்மார்க் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிக்கும் என்று மூன்று நாடுகளும் தெரிவித்தன.
ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நட்பு நாடுகளால் செலுத்தப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் என்று கூறினார், ஆனால் இது எவ்வாறு செய்யப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.
“உக்ரைனின் பாதுகாப்பில் நேட்டோ ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உக்ரைனின் விதிமுறைகளின்படி அமைதியைப் பாதுகாக்கும் அதே வேளையில், உக்ரைனுக்குத் தேவையான உபகரணங்களை விரைவாகப் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று நோர்வே பாதுகாப்பு அமைச்சர் டோர் ஓ. சாண்ட்விக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஐரோப்பா முழுவதும் நீண்டகால பாதுகாப்பிற்கான ஒரு புதிய அடித்தளத்தை உருவாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும், ரஷ்ய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்ற நேட்டோ நாடுகளுக்கு இது ஒரு வலுவான எடுத்துக்காட்டாக அமையும்” என்று ஜெலென்ஸ்கி Xல் பதிவிட்டுள்ளார்.