காஸா பகுதியில் உள்ள இஸ்ரேல் பிணையாளிகளை காப்பாற்றும் தீவிர முயற்சியில் நெதன்யாகு

காஸா பகுதியில் உள்ள பிணையாளிகளுக்கு உணவுமற்றும் மருத்துவ உதவிகளை வழங்க, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் உதவிக்கோரியுள்ளார்.
அந்த அமைப்பின் வட்டாரத் தலைவருடன் இதுகுறித்து நேரடியாக பேசியுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸாவில் தற்போது சுமார் 50 இஸ்ரேலியர்கள் பிணையாளர்களாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அவர்களில் 20 பேர்தான் உயிருடன் உள்ளனர் என நம்பப்படுகிறது.
இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பு, காஸாவுக்குள் நிவாரணப் பொருட்களை நிரந்தரமாக அனுமதிக்க இஸ்ரேல் தயார் எனில், அகாயத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், அப்போது தான் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பிணையாளர்களுக்கான உதவிகளை வழங்க தயார் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய அரசியல் மற்றும் மனிதாபிமான முயற்சி, காஸா பிராந்தியத்தில் நீடித்துவரும் ஆயுத மோதலுக்கு இடையில் பிணையாளர்களின் பாதுகாப்பு குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.