இலங்கையில் நெருக்கடியான நிலையை எட்டிய மருந்து தட்டுப்பாடு பிரச்சினை!
நாட்டில் மருந்துதட்டுப்பாடு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாகவும், அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியம் செய்வதாகவும் இலங்கையின் மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அரசாங்கவைத்தியசாலைகளில் சில மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என இலங்கை மருத்துவசங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மருத்துவநிலையங்களில் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் மருந்துகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நோயாளர்கள் சிலர் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தஒன்றரை வருடங்களாக இந்த நிலை காணப்படுகின்றது எனவும் அரசாங்கம் இந்த விடயத்தின் பாரதூரதன்மையை கருத்தில் கொள்ளவில்லை என வின்யா ஆரியரட்ண குற்றம் சுமத்தியுள்ளார்.