ஸ்பெயினில் மகனின் கடவுச்சீட்டு காலாவதியானதால் விமான நிலையத்தில் விட்டு சென்ற பெற்றோர்

ஸ்பெயினில் 10 வயதுச் சிறுவனை அவரது பெற்றோர் தனியாக விட்டுவிட்டுப் பயணம் செய்ய முற்பட்டதாக விமானச் சேவை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்தச் சிறுவனின் கடவுச்சீட்டு காலாவதியானதால் பெற்றோர் அவரை விட்டுவிட்டு விமானத்தில் ஏறியதாக அந்த ஊழியர் கூறினார்.
உறவினரை அழைத்து மகனை வந்து அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட பின் அவர்கள் இருவரும் அவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவன் தனியாக இருந்ததை அதிகாரிகள் பார்த்ததாகவும் விமானச் சேவை ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் பெற்றோர் ஏறிய விமானத்தைக் கண்டறிந்து விமானம் புறப்படுவதற்கு முன் அதிலிருந்து அவர்களை வெளியேற்றிக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எவ்வாறு பெற்றோரால் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடிகிறது என அந்த விமான நிலைய ஊழியர் வினவியுள்ளார்.
(Visited 41 times, 41 visits today)