நிதிக்காக போலியான அடையாளத்துடன் ஐடி பணிகளுக்கு விண்ணப்பித்த வடகொரியர்கள்!

பல ஆண்டுகளாக மேற்கத்திய நிறுவனங்களுடன் தொலைதூர ஐடி பணிகளுக்கு விண்ணப்பிக்க நூற்றுக்கணக்கான போலி ஐடிகளை வடகொரியா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வட கொரியாவிற்கு நிதி திரட்டுவதற்கான ஒரு பரந்த ரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்மூலமாக ஐரோப்பா முழுவதிலும் இருந்து $5,000 (£3,750) சம்பாதிக்க முடியும் என்று நபர் ஒருவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தனது அடையாளத்தைப் பாதுகாக்க பெயர் குறிப்பிட விரும்பாத அவர், வட கொரியா நடத்தும் நிழல் நடவடிக்கையில் பங்கேற்க சீனா மற்றும் ரஷ்யா அல்லது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு பலர் அனுப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட வட கொரியா பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.