வட அமெரிக்கா

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திய ட்ரம்ப்புக்கு அமைதி நோபல் வழங்க வேண்டும் என கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் உட்பட உலகெங்கிலும் உள்ள பல மோதல்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட்,

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போதைய தாய்லாந்து மற்றும் கம்போடியா மோதல், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு மோதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், செர்பியா மற்றும் கொசாவோ மோதல், எகிப்து மற்றும் எத்தியோப்பியா மோதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆறு மாத பதவிக் காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளர். எனவே இது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கான நேரம்” என்றார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்