மலேசியாவில் 12வயது சிறுமியை சுத்தியால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது

ஜோகூர் பாருவில் 12 வயதுச் சிறுமியை இரும்புச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.முன்னதாக, தலையில் காயமடைந்த சிறுமி ரத்தம் சிந்தக் காணப்படும் காணொளி ஃபேஸ்புக்கில் பரவியது.அதையடுத்து மலேசியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
தாமான் உங்கு துன் அமினா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜூலை 26ஆம் தேதி அச்சிறுமி தாக்கப்பட்டதாகக் காவல்துறையின் ஜோகூர் பாரு வடக்குப் பிரிவுத் தலைவர் பல்வீர் சிங் கூறினார்.
சம்பவ நாளன்று மாலை அதுகுறித்துப் புகாரளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.விசாரணையைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய 39 வயது நபர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சைக்காக ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்று பல்வீர் குறிப்பிட்டார்.மேலும் தாக்குதலைத் தொடர்ந்து சிறுமியின் தலையில் காயங்களும் வலது கையில் வீக்கமும் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
சந்தேக நபர் மீது ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்த குற்றவியல் பதிவுகள் இருப்பதாகக் காவல்துறை கூறியது.அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சோதனையில் தெரியவந்ததாக அது குறிப்பிட்டது.
ஜோகூர் பாரு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அந்த நபர் ஜூலை 27ஆம் தேதி முதல் ஏழு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியது தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்படக்கூடும்.
இவ்வேளையில், பொதுமக்கள் வன்செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய அவ