கிரேக்கத்திற்கு வருகை தரும் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

கிரேக்கத்திற்கு வருகை தரும் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுத்தீ குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரேக்கத்தில் 44 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையுடன் மக்கள் போராடி வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் காட்டுத்தீ எரிந்தது, மேலும் சில குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
145 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 44 தீயணைப்பு வாகனங்கள், 10 தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஏழு ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கின்றன.
(Visited 1 times, 1 visits today)