இந்தியா

இந்தியா – நிலச்சரிவில் சிக்கிய கேதார்நாத் யாத்திரிகர்கள் நூறு பேர் மீட்பு

கேதார்நாத் யாத்திரையின்போது நிலச்சரிவில் சிக்கிய யாத்திரிகர்கள் நூறு பேரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றனர்.

இந்த ஆண்டுக்கான கேதார்நாத் புனித யாத்திரை பயணம் கடந்த மே 2ஆம் திகதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், யாத்திரிகர்கள் பாதுகாப்புக்காக அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பொதுப் பணித்துறையினரும் மீட்புப் படையினரும் நாள்தோறும் இரவு, பகல் பாராமல் யாத்ரீகர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சோன்பிரயாக் பகுதி அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் நிலச்சரிவில் சிக்கியதாக வெளிவந்த தகவலை அடுத்து, மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஆஷிஷ் திம்ரி தெரிவித்தார்.இதற்கிடையே, டேராடூன், சம்பாவத், நைனிடால் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே