ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்குமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடரும் நிலையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் அண்மையில் தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து, “உடன்பாட்டிற்கு ஹமாஸ் விருப்பமில்லையே என்பது தெளிவாகியுள்ளது. அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் போலிருக்கிறது,” என டிரம்ப் கூறினார்.
மேலும், “இஸ்ரேல் ஒரு கட்டத்தில் ஹமாஸ் அமைப்பின் கதையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)