இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதியின் தீர்மானம் – கடும் கோபத்தில் இஸ்ரேல் பிரதமர்

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்தற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த முடிவை விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இது ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் பாலஸ்தீனத் தலைவர்கள் பிரான்சின் ஆதரவை வரவேற்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடு பிரான்ஸ். 140 க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி