கனடாவில் 60 மணிநேரம் சுரங்கத்தில் சிக்கிய 03 தொழிலாளர்கள் மீட்பு!

மேற்கு கனடாவில் உள்ள தங்கம் மற்றும் செம்பு சுரங்கத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் 60 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சிக்குண்ட குறித்த மூவரும் வியாழக்கிழமை இரவு பாதுகாப்பாக மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டதாக ரெட் கிறிஸ் சுரங்க நிறுவனமான நியூமாண்ட் கார்ப் தெரிவித்துள்ளது.
கனடாவை தளமாகக் கொண்ட ஹை-டெக் துளையிடுதலின் ஒப்பந்ததாரர்களான கெவின் கூம்ப்ஸ், டேரியன் மதுகே மற்றும் ஜெஸ்ஸி சுபாட்டி ஆகியோர் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பதாக அது மேலும் கூறியது.
“இது கவனமாக திட்டமிடப்பட்டு உன்னிப்பாக செயல்படுத்தப்பட்ட மீட்புத் திட்டம்” என்று நியூமாண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டென்வரை தளமாகக் கொண்ட நிறுவனம், மீட்பு நடவடிக்கையில் ட்ரோன்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ஸ்கூப் ஆகியவை ஈடுபட்டதாகவும், இது 20 முதல் 30 மீட்டர் (65 முதல் 100 அடி) நீளமும் ஏழு முதல் எட்டு மீட்டர் (22 முதல் 26 அடி) உயரமும் கொண்ட ஒரு பெரிய பாறை வீழ்ச்சியை தோண்டி எடுத்ததாகவும் கூறியது.