அமெரிக்காவில் கரும்புச் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட கோக் பானம் அறிமுகம்

அமெரிக்காவில், கரும்புச் சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய கோக் பானத்தை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக கோகோ கோலா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய தயாரிப்பு, அமெரிக்க சுகாதார அமைச்சர் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் முன்னெடுத்துள்ள “அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்றுவோம்” என்ற முயற்சியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.
இதுவரை, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் கரும்புச் சர்க்கரையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கோக் பானங்கள் விற்பனையாகி வருகின்றன. தற்போது அமெரிக்க சந்தையிலும் அதே ருசி மற்றும் இயற்கையான சுவையுடன் கூடிய பானம் கிடைக்கப்போகும் என்பது, பலரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)