இஸ்ரேல் தாக்குதலில் 115 பாலஸ்தீனியர்கள் பலி – முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல்

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 115 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத உற்பத்தி தலைமையகம் உள்ளிட்ட 75 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அதில் ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு தளபதியான பஷார் தாபெட் உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், உயிரிழந்த 115 பேரில் 92 பேர் சாதாரண பொதுமக்கள் என்றும், அவர்கள் உணவு தேடிக் காசா நகரில் அலைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் படையெடுப்பால் ஏற்பட்ட பஞ்ச நிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 பேர் பசியால் உயிரிழந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)