அமெரிக்க வரி விதிப்பு: மெக்சிகோ தக்காளி விவசாயிகள் கடும் பாதிப்பு

அமெரிக்கா, மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்கு 17.09% வரியை தற்போது விதித்துள்ளது.
இந்த புதிய வரிவிதிப்பு, மெக்சிகோவின் தக்காளி ஏற்றுமதியை 20% வரை குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி, வேலை இழப்புகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் விலை சரிவு போன்ற எதிர்மறை விளைவுகளை மெக்சிகோ விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் நுகரிக்கப்படும் தக்காளிகளில் மூன்றில் இரண்டு பங்கு மெக்சிகோவிலிருந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தக்காளிகள் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி குறைவால் உள்நாட்டுச் சந்தையில் தக்காளி வழங்கல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் விலை சுமார் 40% வரை சரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 3 visits today)