காஸாவில் பெரும்பாலான குடியிருப்புகளை திட்டமிட்டு அழிக்கும் இஸ்ரேல் இராணுவம்

காஸாவின் முக்கிய நகரங்கள் மற்றும் பல பிரதேசங்களில் இஸ்ரேல் இராணுவம் பெரும்பாலான குடியிருப்புகளைக் திட்டமிட்டுப் பெரும் அளவில் அழித்து வருகிறது.
செயற்கைக்கோள் படங்களுக்கயமைய, காஸா, கான் யூனிஸ் மற்றும் ராபா பகுதிகளில் குடியிருப்பு வளாகங்கள், விவசாய நிலங்கள் மற்றும் அத்தியாவசிய வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய போரில், காஸா சுகாதார அமைச்சகம் 58,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் உயிரை இழந்துள்ளதாக தகவல் அளித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கியுள்ளனர். ஐ.நா. சமீபத்திய மதிப்பீட்டின்படி, காஸாவில் 59.8% கட்டடங்கள் அழிந்துள்ளன.
அல்ஷிஃபா மருத்துவமனை, பாடசாலைகள், மசூதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இஸ்ரேல் தனது படைகளுக்கான இடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக கூறினாலும், மனித உரிமை அமைப்புகள் இதனை ‘டோமிசைடு’ (வாழ்விடங்களை அழித்தல்) எனக் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்த அழிவுகள் காஸாவின் மனிதாபிமான நெருக்கடியை அதிகரித்துள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. 19 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் மக்கள் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளின்றி தவிக்கின்றனர்.