புறப்பட்ட சிறுதி நேரத்தில் தீப்பிடித்த விமானம் – அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கம்!

டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
போயிங் 767 விமானம், அட்லாண்டாவுக்குப் பறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
விமானத்தின் இடது இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இருப்பினும், விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
(Visited 2 times, 2 visits today)