பிரான்ஸில் தேவாலயத்திற்கு பின்னல் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை!

பிரான்சில் ஒரு தேவாலயத்தின் பின்னால் விடுமுறையில் இருந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க பெண் நார்மண்டியின் பார்ஃப்ளூர் கடற்கரையில் உள்ள செயிண்ட்-நிக்கோலஸ் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள ஒரு பாறைப் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் அந்தப் பகுதியில் விடுமுறையில் இருந்தார், மேலும் நகரின் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு குடிசையில் தனது துணையுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
தடயவியல் குழுக்கள் சம்பவம் குறித்த மேலதிக எச்சங்களை சேகரித்து வருவதாகவும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)