அமெரிக்க அரச அலுவலகத்தில் வெடிப்பு – மூன்று அரசு அதிகாரிகள் பலி

அமெரிக்கா – லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் பிஸ்கெய்ன்ஸ் பயிற்சி மையத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிப்பில் மூன்று அரசு அதிகாரிகள் இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள், குண்டுவெடிப்பு, தீ வைப்பு மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான நிபுணர்கள் என தெரிவிக்கப்படுகின்றது..
மூன்று அதிகாரிகளும் 19 முதல் 33 ஆண்டுகள் வரை இந்தத் துறையில் பணியாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு காரணமாக இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு அகற்றும் குழு ஒன்று துறைக்கு வெடிபொருட்களை கொண்டு சென்றபோது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வெடிபொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லத் தவறியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெடிபொருட்களை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்றதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக மாநில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.