ஜப்பானில் நபரை காப்பாற்றிய நாய் – உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்

ஜப்பானில் தனது உயிரை காப்பாற்றிய நாய்க்கு நன்றிக்கடன் செலுத்த பெராரி காரை விற்று நாய்களுக்கு உதவிய நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் யெய்சு நகரைச் சேர்ந்த 54 வயதுடைய ஹிரோடாகா சைட்டோ என்ற நபர், பிறரால் அடக்க முடியாத, கடிக்கும் போக்குடைய நாய்களுக்கு அன்பளிப்பாய், தமது சொகுசு காரையும், நிறுவனத்தையும் விற்று, அந்த பணத்தில் ஒரு பாதுகாப்பான உறைவிடம் அமைத்துள்ளார்.
சைட்டோ ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவரின் செல்ல நாய் தன்னை ஆவலுடன் தடுத்து நிறுத்தியதனால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதன் பின், அந்த நாயின் அன்புக்காக மற்றும் அதற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற உணர்வால், பிறர் பராமரிக்க முடியாத நாய்களுக்கு வாழ்வதற்கான இடம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார்.
“பிரச்சனையுள்ள நாய்களின் பெரும்பாலான நடத்தை, அவை அனுபவித்த மனிதத் துஷ்பிரயோகங்களின் விளைவாகத்தான் தோன்றுகிறது,” என சைட்டோ தெரிவித்துள்ளார்.