இலங்கையின் பல மாகாணங்களுக்கு புயல் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாகும் காரணத்தால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நாட்டின் பிற பகுதிகளிலும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மற்றும் வட மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் சப்ரகமுவ, மேல், வடமேல் , வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.