பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்பட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலான பனிக்கட்டி

1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலான ஒரு பனிக்கட்டி பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் அதை உருக்கி பூமியின் காலநிலை பற்றிய முக்கிய தகவல்களை பெறவுள்ளது.
அண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில், சுமார் 2,800 மீட்டர் ஆழத்தில் இருந்து பனிக்கட்டி மாதிரிகள் எடுக்கப்பட்டு, காலநிலை ஆய்வுக்காக பிரித்தானியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த பனிக்கட்டி மாதிரிகள், சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என நம்பப்படுகிறது.
இதன்மூலம், மனித வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பூமியின் காலநிலை எப்படி இருந்தது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும்.
ஐரோப்பிய ஆணையின் நிதியுதவியுடன், பத்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.
(Visited 5 times, 7 visits today)