ஆசியா செய்தி

வங்கதேசத்தில் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணி நிறுத்தம்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மூதாதையர்களுக்குச் சொந்தமாக வங்கதேசத்தில் உள்ள இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.

இந்நிலையில், சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது.

மேலும் அதை எவ்வாறு மீண்டும் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!