இஸ்ரேலின் அனைத்து குற்றங்களுக்கும் துணை நிற்கும் அமெரிக்கா – கடும் கோபத்தில் ஈரான்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எதிர்த்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
ஈரான், அதன் எதிரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதில் திறமை வாய்ந்த நாடாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதை நாங்கள் பாராட்டுகிறோம். இஸ்ரேல் செய்துவரும் அனைத்து குற்றங்களுக்கும் அமெரிக்கா முழுமையான ஆதரவாளராக இருக்கிறது. அமெரிக்கா என்பது ஒரு புற்றுநோய் கட்டி போல உள்ளது. இஸ்ரேல், அமெரிக்காவின் ஏவல் நாயாக செயல்படுகிறது. எவ்விதமான புதிய ராணுவத் தாக்குதலுக்கும் ஈரான் முழுமையாக பதில் அளிக்கத் தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்த மோதலுக்குப் பின்னர் அவர் வெளியிட்டுள்ள முக்கியமான கருத்தாக கருதப்படுகிறது.
கடந்த மாதம் நடந்த மோதல்களில், ஈரானின் மூத்த ராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். மொத்தமாக 1,060 பேர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.