புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் இம்ரான் கானின் முன்னாள் மனைவி

ஒரு புதிய முன்னேற்றத்தில், பத்திரிகையாளரும், பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்) நிறுவனர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியுமான ரெஹாம் கான், பாகிஸ்தான் குடியரசுக் கட்சி என்ற தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
“நான் இதற்கு முன்பு ஒருபோதும் அரசியல் பதவிகளை ஏற்றுக்கொண்டதில்லை. ஒரு நபருக்காக ஒரு முறை ஒரு கட்சியில் சேர்ந்தேன்,” என்று அவர் தனது முன்னாள் கணவரைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
கட்சி மக்களின் குரலாக செயல்படும் என்றும், ஆளும் உயரடுக்கைப் பொறுப்பேற்க வைக்கும் என்றும் ரெஹாம் கான் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் தற்போதைய அரசியல் சூழலில் அதிகரித்து வரும் அதிருப்திக்கு ஒரு பிரதிபலிப்பே தனது புதிய கட்சி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“இது வெறும் ஒரு கட்சி அல்ல, அரசியலை சேவையாக மாற்றுவதற்கான ஒரு இயக்கம்” என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
“2012 முதல் 2025 வரை, நான் கண்ட பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. அது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.