கொழும்பில் உள்ள பௌத்த விரையில் ஹன்சிகா மோத்வானி வழிபாடு

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற கங்காராமய பௌத்த விகாரைக்கு சென்று வழிபாடில் ஈடுபட்டார்.
விகாரத்தில் பூஜைகளில் பங்கேற்ற ஹன்சிகா, பௌத்த பிக்குகளிடம் ஆசியும் பெற்றார். அவருடன் அவரது தாயாரும் இருந்தார்.
பின்னர், அங்குள்ள நூலகம், அருங்காட்சியகம், கல்வி நிலையம் மற்றும் யாசகசாலை ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் அமைப்புகளையும் பண்பாட்டு மரபுகளையும் ரசித்தார்.
நடிகையின் இந்த விஜயம், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
(Visited 1 times, 1 visits today)