ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பதாக டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியப் பொருள்கள் மீது 500% வரி விதிக்கப்படும் என்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யா மீது தடைகளை தீவிரப்படுத்த அமெரிக்க செனட்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப்பின் நெருங்கிய சகாவான செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டுவதை தடுக்கும் நோக்கில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க மசோதாவில் சட்டவிதி சேர்க்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 500% வரியை விதிக்க வழிவகை செய்யும். செனட்டர் கிரஹாமின் மசோதாவை ஆதரிப்பதாக டிரம்ப் கூறியிருப்பதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.