ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை இதயத்துடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு வெளியே இது போன்ற நிகழ்வு இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
40 வயதில் இருக்கும் அந்த நபர், கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த அறுவை சிகிச்சை நவம்பர் 2024 இல் சிட்னியில் உள்ள செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
நோயாளி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
105 நாட்கள் இயந்திரத்துடன் வாழ்ந்த பிறகு, மார்ச் 2025 இல் அவருக்கு ஒரு நன்கொடையாளர் இதயம் கிடைத்தது.
அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட், BiVACOR போன்ற செயற்கை இதயங்கள் ஒரு நாள் நன்கொடையாளர்களின் தேவையை நீக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டுகிறார்.