இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உக்ரைன் ஜனாதிபதியுடன் முதல் சந்திப்பை நடத்திய போப் லியோ

இத்தாலி தலைநகர் ரோமில் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் உக்ரைன் மீட்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இத்தாலிக்கு வருகைத் தந்துள்ளார்.

இதையடுத்து, ரோமிலுள்ள வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப்பின் கோடைக்கால தங்குமிடமான காஸ்டல் கண்டொல் போவில், போப் பதினான்காம் லியோவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை உக்ரைன் மீட்க உதவிய, பேராலயத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாகவும், இருவரும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அவசர தேவையைக் குறித்து கலந்துரையாடியதாகவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்காக போப் தனது வருத்தங்களைத் தெரிவித்ததுடன், கைதிகளின் விடுதலைக்கு இருதரப்பும் இணைந்து முடிவுக்காண வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி