ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் சிறிது காலம் வேலையை விடும் ஊழியர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

சிங்கப்பூரில் பணியாற்றும் பலர், தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிது காலத்திற்கு வேலையை விட்டு விலகும் எண்ணிக்கையில் பெரிதும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

LinkedIn வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டில் 17% பேர் தற்காலிகமாக வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இது 2020ஆம் ஆண்டில் இருந்த 12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாகும்.

இந்த வகையான தற்காலிக இடைவேளைக்கு “micro-retirement” என்ற பெயர் வழங்கப்படுகிறது. சில வாரங்களில் இருந்து சில ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இந்த காலத்தில், பணியாளர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, புதிய திறன்களை பெறுவதற்கும் முனைப்புடன் இருக்கின்றனர்.

இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிச் செல்ல வேண்டியது என்பது பழைய எண்ணம். நவீன தலைமுறை, மனநிறைவு மற்றும் வாழ்வுத் தரத்தை முக்கியமாகக் கருதுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதீத வேலை அழுத்தம், வேலை-வாழ்க்கை சமநிலை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், ஊழியர்கள் தற்காலிக இடைவேளையை விரும்புகின்றனர். இந்த மாற்றத்தை நிறுவங்களும் புரிந்து கொண்டு, தங்களது வேலை முறைமைகளில் நெகிழ்வுத்தன்மையுடன் (flexibility) மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் ஆலோசிக்கின்றனர்.

மத்திய வயதினரான ஊழியர்கள், இந்த இடைவேளையை புதிய வாய்ப்புகளுக்கான வழியாகக் காண்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்