நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேசிக்கு மீண்டும் விளக்கமறியல்
அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி நோயாளிகளுக்கு நஷ்டம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேசி சூரசிங்க விஜேரத்னவை மீண்டும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மற்ற இரண்டு சந்தேக நபர்களும் தலா 2 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)





